முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா

திங்கட்கிழமை, 22 நவம்பர் 2021      அரசியல்
Image Unavailable

அமெரிக்கப் பயணம் முடிந்து சென்னை திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பயணம் முடிந்து சென்னை திரும்பிய தனக்கு லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும்  கமல்ஹாசன்  தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.  

மேலும், மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், இன்னமும் நோய் பரவல் நீங்க வில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் டுவிட்டரில் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கமலுக்கு கொரோனா என்ற செய்தி பரவியதும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து