முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தலைமையில் சென்னையில் இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தலைமையில் இன்று சென்னையில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் தலைமையில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க எவ்வாறு எதிர்கொள்வது என்பதை பற்றியும், மாவட்டச் செயலாளர்கள் எப்படி இந்த தேர்தலில் பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட இருக்கின்றன. அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு எந்த அடிப்படையில் செய்ய வேண்டும். அவர்களுடன் எவ்வாறாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். பேச்சுவார்த்தை குழு அமைப்பு, உள்ளிட்டவை குறித்தும் முக்கிய ஆலோசனை செய்யப்படுகிறது.

மேலும், பெட்ரோல் டீசல் மீதான விலையை மாநில அரசு குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, போராட்டத்தை அ.தி.மு.க அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானமும், பொங்கல் பரிசுடன் 2000 ரூபாய் நிதியை தமிழக அரசு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானமும் நிறைவேற்றபட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து