முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தக்காளிக்கு பிரியாணி இலவசம் : பிரியாணிக்கு தக்காளி இலவசம் - கடைக்காரரின் வித்தியாசமான அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கடந்த இரு வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தக்காளி விலை கிலோ ரூ.110-ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.130 வரை விற்கப்படுகிறது. 

இந்த நிலையில் சோத்துப்பாக்கம் வந்தவாசி சாலையை சேர்ந்த ஆம்பூர் பிரியாணி கடைக்காரர் ஒருவர், தக்காளி விலையேற்றத்தை மனதில் வைத்து வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தி உள்ளார். அதில் தக்காளிக்கு பிரியாணி இலவசம், பிரியாணிக்கு தக்காளி இலவசம் என்றும் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு கிலோ சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் 2 சிக்கன் பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தி உள்ளார்.

மேலும் இந்த சலுகை நேற்று ஒரு நாள் மட்டும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடைக்காரரின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து