முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள பத்மநாபன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பத்மநாபன் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத்துறை சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்தார்.  இந்நிலையில், பத்மநாபன் வீட்டில் நேற்று காலை சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதில், கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப்படையினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த இடிபாடுகளில் சிக்கி தீயணைப்பு வீரர் பத்மநபன், அவரது மனைவி தேவி, கார்த்திக்ராம்(18), எல்லம்மாள் ஆகியோர்  உயிரிழந்துள்ளனர்.

ஏற்கனவே ராஜலட்சுமி என்பவர் உயிரிழந்த நிலையில், மேலும் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதன் மூலம் இந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து