முக்கிய செய்திகள்

சி.எஸ்.கே அணிக்காக அடுத்த 3 ஐ.பி.எல். சீசன்களிலும் எம்.எஸ்.டோனி விளையாடுகிறார்?

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      விளையாட்டு
Sports54

Source: provided

புதுடெல்லி: ஐ.பி.எல் தொடரின் அடுத்த மூன்று சீசன்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

நான்கு வீரர்கள்...

ஐ.பி.எல் தொடரின் அடுத்த மூன்று சீசன்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. டோனியைத் தவிர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரையும் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) விதிகளின்படி, ஒவ்வொரு ஐ.பி.எல்  அணியின் உரிமையாளரும், அதிகபட்சமாக நான்கு வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

மொயீன் அலி...

சென்னை அணி  இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலியுடன்  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தியபடி ஐ.பி.எல் போட்டியின்  அடுத்த சீசன் இந்தியாவில் விளையாடப்படும் என்பதால்  மொயீன் அலி முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று சென்னை கருதுகிறது. மொயீன் குழுவில் வரவில்லை என்றால், இங்கிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சாம் கர்ரன்  நான்காவது மற்றும் கடைசியாக தக்கவைக்கும் வீரராக இருப்பார்.

அடுத்த மாதம் ஏலம்... 

ஐ.பி.எல் தொடரின் மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால், அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் பெயர்களை நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஐ.பி.எல் நிர்வாகக் குழு கேட்டுக்கொண்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷாப் பண்ட், ஆல்-ரவுண்டர் அக்சர் படேல், பிரித்வி ஷா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரைத் தக்க வைத்துக் கொள்ள உள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் விடுவிக்கப்பட்ட ஒரே காரணம், அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்த விரும்பினார், ஆனால் நிர்வாகம் ரிஷாப் பண்ட்  கேப்டன் பதவியில் வைக்க  விரும்புகிறது.

ரோகித் - பும்ரா...

மும்பை இந்தியன்ஸ்  பொறுத்தவரை, அவர்கள் ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை தக்கவைக்க உள்ளனர். கீரன் பொல்லார்ட் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மும்பை, சூர்யகுமார் யாதவை ஏலத்தில் எடுக்க  விரும்புகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோரை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. மற்ற இரண்டு இடங்களைப் பொறுத்தவரை, இன்னும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

தக்கவைக்கப்படும்...

சென்னை சூப்பர் கிங்ஸ்: மகேந்திர சிங் டோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி/சாம் குர்ரான், டெல்லி அணி  : ரிஷாப் பண்ட் , பிரித்வி ஷா, அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, மும்பை இந்தியன்ஸ்: ரோகித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா, கீரன் பொல்லார்ட் (பேச்சுவார்த்தை நடக்கிறது), இஷான் கிஷான் (அநேகமாக), கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து