முக்கிய செய்திகள்

ஸ்ரேயஸ் ஐய்யருக்கு ரிக்கி பாண்டிங் வாழ்த்து

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      விளையாட்டு
Sports58

Source: provided

ஸ்ரேயஸ் ஐய்யருக்கு ரிக்கி பாண்டிங் வாழ்த்து

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கான்பூரில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரராக ஸ்ரேயஸ் ஐயர் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் டெஸ்ட் அணியில் இடம் பிடித்த ஐயருக்கு ஆஸ்திரேலிய அணியில் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டுவீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் செய்த கடின உழைப்புக்கு தற்போது இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. இதற்கு நீங்கள் தகுதியானவர். இது ஆரம்பம் மட்டுமே. உன்னை நினைத்து பெருமை கொள்கிறேன்". என்று தன்னுடைய பதிவில் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ரிக்கி பாண்டிங், ஸ்ரேயஸ் ஐயர் விளையாடும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமைப்பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

_______________

மே.இ.தீவுக்கு எதிரான டெஸ்ட்: 

இலங்கை அணி அபார வெற்றி

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 386 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணி எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து 230 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. 

அடுத்து 156 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 191 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் கருணாரத்னே (83 ரன்), மேத்யூஸ் (69 ரன்) அரைசதம் அடித்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 348 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் வெஸ்ட் அணி இண்டீஸ் 160 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இலங்கை அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியின் கேப்டன் கரணரத்னே ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

____________

பெண் குழந்தை பிறந்தது:

புவனேஸ்வர் குமார் தகவல்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். இந்திய அணிக்காக 21 டெஸ்டுகள், 119 ஒருநாள், 55 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் 31 வயது புவனேஸ்வர் குமார். 2017-ல் நுபுர் நாகரைத் திருமணம் செய்தார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை, நியூசிலாந்து டி20 தொடர் ஆகியவற்றில் பங்கேற்றார்.

இந்நிலையில் பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளதாக ட்விட்டரில் புவனேஸ்வர் குமார் அறிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் புவனேஸ்வருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 

_______________

கான்பூர் முதல் டெஸ்ட் குறித்து

ஆடுகள வடிவமைப்பாளர் தகவல்

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கான்பூர் மைதானத்தின் ஆடுகள வடிவமைப்பாளர் ஷிவ் குமார், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சுழற்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளத்தைத் தயாரிக்கும்படி பிசிசிஐயிடமிருந்தோ இந்திய அணி நிர்வாகத்திடமிருந்தோ எனக்கு உத்தரவு எதுவும் வரவில்லை. ஒரு நல்ல ஆடுகளத்தைத் தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் ஆடுகளம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நவம்பர் மாதத்தில் ஆடுகளத்தின் கீழே ஈரத்தன்மை இருக்கும். எனினும் இது உறுதியான ஆடுகளம். அவ்வளவு சுலபத்தில் விரிசல் அடையாது. சமீபகாலமாக மூன்று நாள்களில் டெஸ்ட் ஆட்டங்கள் முடிவடைந்து விடுகின்றன. அதற்குக் காரணம் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக டி20 கிரிக்கெட் மனநிலையுடன் பேட்டர் விளையாடுகிறார்கள். இந்த டெஸ்ட் ஆட்டம் மூன்று நாள்களில் முடிவடையாது என்பதில் நம்பிக்கையாக உள்ளேன் என்றார். 

______________

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து