முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேசப் பயணிகளை சோதிக்க உத்தரவு: இந்தியாவில் புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் எதுவும் இல்லை : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் இதுவரை புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் எதுவும் இல்லை என்றும், விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளை கடுமையாக சோதிக்க உத்தரவிட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529 என அடையாளம் காணப்பட்ட புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக அங்குள்ள விஞ்ஞானிகள் அறிவித்தனர். இதனை அடுத்து மத்திய அரசு, தென்னாப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளை கடுமையாகச் சோதித்து, நோயறிந்து தெரிவிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஓர் ஆலோசனையை வழங்கியது.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது., இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்ட புதிய கொரோனா மாறுபாடு நோய்த்தொற்று எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529 என அடையாளம் காணப்பட்ட புதிய மாறுபாட்டைக் கண்டறிந்ததாக அங்குள்ள விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் பிறழ்வுகள் பற்றி இதுவரை வெளிவந்துள்ள அறிக்கைகளின்படி பொது சுகாதாரத்தைப் பாதிக்கும் தீவிரத் தாக்கங்களை அந்த வைரஸ் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த மாறுபாடு வைரஸ் கணிசமாக அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது,

இதனை அடுத்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தென்னாப்பிரிக்கா மற்றும் பிற ஆபத்தில் கடுமையான நோய்த்தாக்கம் உள்ள நாடுகளில் இருந்து வரும் சர்வதேசப் பயணிகளை கடுமையாகச் சோதிக்குமாறு உத்தரவிட்டது. மேலும், ஏதாவது பாதிப்புகள் இருந்தால் நோயறிந்து தெரிவிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஓர் ஆலோசனையை வழங்கியது.

சமீபத்தில் விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மற்றும் சர்வதேச பயணத்தைத் திறப்பதன் மூலம் இதனால் நாட்டிற்கு கடுமையான பொது சுகாதார தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி, நடந்த சோதனைகளில் புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் நோய்த்தொற்று எதுவும் இதுவரை பதிவாகவில்லை என தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை, பிரிட்டன் அரசின் சுகாதாரப் பாதுகாப்பு ஏஜென்சி, புபுதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் ஸ்பைக் புரோட்டீன் இருப்பதாகக் கூறியது, இது கோவிட்-19 தடுப்பூசிகளை அடிப்படையாகக் கொண்ட அசல் கொரோனா வைரஸில் இருந்து வியத்தகு முறையில் வேறுபட்டது. மேலும் இது ஏற்கனவே உள்ள தடுப்பூசிகளின் செயல்திறனைக் குறைத்துவிடும் கடும் தாக்கம் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து