முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? - தலைமை தளபதி பிபின் கருத்துக்கு சீனா மறுப்பு

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என்று பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா அச்சுறுத்தலாக இல்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானை விடவும் சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என்று பிபின் ராவத் கூறியிருந்தார். வடக்கு எல்லை பகுதியில் சீனா படைகளைக் குவித்து வருவதாகவும் அங்கு ஆபத்து அதிகமாக இருப்பதாகவும் பிபின் ராவத் கூறியிருந்தார்.  இதற்கு சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது. பொறுப்பற்ற அபாயகரமான கருத்து என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மூத்த கர்னல் வு கியான் கூறியதாவது:-

இந்திய அதிகாரிகள் சீன ராணுவ அச்சுறுத்தல் என்று கூறுவது யூகங்கள் மட்டுமே. ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இல்லாமல், புவிசார் அரசியல் மோதலைத் தூண்டிவிடுவது பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது. இந்தியாவும் சீனா ஒன்றுக்கு ஒன்று அச்சுறுத்தலாக இல்லை என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து