முக்கிய செய்திகள்

தொடர் கனமழை எதிரொலி: குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      தமிழகம்
Kuttalam- 2021 11 26

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, 2-வது நாளாக குற்றாலம் பேரருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தென்காசி மாவட்டத்தில், வியாழக்கிழமை காலை முதல் பெய்து தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர் மழை எதிரொலியாக, குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து