முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழு நேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

முழு நேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத் தொகை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 2.50 லட்சத்திலிருந்து ரூ. 8.00 லட்சமாக உயர்த்தியும், மாணாக்கர்களின் எண்ணிக்கை 1200-லிருந்து 1600 ஆக உயர்த்தியும், ஒரு மாணவருக்கான ஊக்கத் தொகையினை ரூ. 50,000-லிருந்து ரூ.1.00 லட்சமாக உயர்த்தியும் அரசாணை வெளியிடப்பட்டது.  

இத்திட்டதிற்கென, 2021-2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட நிதியொதுக்கீட்டில் ரூ. 16 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 2020-2021 ஆம் ஆண்டு முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத் தொகைத் திட்டத்தில் 1124 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து