முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டமளிப்பு விழாவில் புறக்கணிப்பு: சென்னை ஐ.ஐ.டி.யில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடுவதை உறுதி செய்ய அரசு வலியுறுத்தல்

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை ஐ.ஐ.டி.யின் நிகழ்ச்சிகளில் எதிர்காலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதன் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி.யின் 58-வது பட்டமளிப்பு விழா கடந்த 20-ம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. நிகழ்வு தொடங்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாதது, சர்ச்சையான நிலையில், பாமக, நாம் தமிழர் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்து, பாமக சார்பில் வளாகம் முன் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இதனிடையே, ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம் எழுதி உள்ளார். அதில், ''தமிழ்நாட்டின் சென்னையில் 250 ஹெக்டேர் நிலம் ஒதுக்கித் தந்து ஐ.ஐ.டி. வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐ.ஐ.டி.யின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அண்மையில், தமிழ்நாடு அரசிடம் ஐ.ஐ.டி. சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.ஐ.டி.யின் 58-வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. எதிர்காலத்தில் அனைத்து நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து