முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் இன்று 12-வது மெகா தடுப்பூசி முகாம்

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகம் முழுவதும் இன்று 12-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக செயல்படுத்தி மாநிலம் முழுவதும் மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களை நடத்திட உத்தரவிட்டார். அதனடிப்படையில், மாநிலம் முழுவதும் கோவிட் மெகா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு, பொதுமக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் நாட்களில் வார்டிற்கு 2 வீதம் 400 நிரந்தர மருத்துவ முகாம்கள், வார்டிற்கு 6 வீதம் 1200 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 1600 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.  இதுவரை நடத்தப்பட்ட 11 மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் 16,72,673  கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.   தொடர்ந்து, இன்று  (28.11.2021) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் 1600 முகாம்களுடன் 12 வது கோவிட் மெகா  தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 2 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக நம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில்  முழு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து