முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கான்பூர் டெஸ்ட் 4-ம் நாள் போட்டி நிறைவு: இந்தியா - நியூசிலாந்து இன்று கடைசி ஆட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கான்பூர்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 345 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்தார். 

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து  அணி 296- ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  அடுத்து 49 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில்  ஒரு விக்கெட்டுக்கு 14 ரன்கள் எடுத்து மொத்தம் 63 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

4- ஆம் நாள் ஆட்டம் துவங்கியதில் இருந்தே இந்திய அணி தடுமாற்றம் கண்டது. முன்வரிசை பேட்ஸ்மேன்களான புஜரா, கேப்டன் ரகானே, மயங்க் அகர்வால் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால் பின்வரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர், விருத்திமான் சாகா ஆகியோரின் அரைசதம் மற்றும் அஸ்வின், அக்சர் படேலின் பங்களிப்புடன் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.

இறுதியில் இந்திய அணி 81 ஓவர்கள் முடிவில்  7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து 283 ரன்கள் முன்னிலை வகித்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 4 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிபெற இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து