முக்கிய செய்திகள்

மூன்றாவது பாடலை வெளியிட்ட ராஜமௌலி

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      சினிமா
Rajamouli 2021 11 28

Source: provided

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் டிவிவி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் தானய்யா இணைந்து தயாரித்துள்ள மிகப்பிரமாண்ட படைப்பு ஆர்.ஆர்.ஆர். படம்  ( இரத்தம் ரணம் ரௌத்திரம்). பாகுபலி வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. பாலிவுட் நாயகி ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன. இதனை ஒட்டி சமீபத்தில் சென்னையில், இப்படத்தின் தமிழ் பதிப்பின், பிரமாண்ட விழாவில் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலை இயக்குனர் SS.ராஜமௌலி வெளியிட்டார். அப்போது பேசிய அவர், மரகதமணிதான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். அவர் எப்போதும் படத்தின் காட்சிகளுக்கு இசையமைக்க மாட்டார். படத்தின் உயிர் எதைப் பற்றியதோ, படம் என்ன சொல்ல வருகிறதோ அதற்கு தான் இசையமைப்பார். மதன் கார்க்கி வரிகளில் படத்தின் மொத்த ஆத்மாவையும் அவர் இந்த பாடலில் கொண்டு வந்திருக்கிறார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து