முக்கிய செய்திகள்

அடுத்த வாரம் வெளியாகும் ஆன்டி இண்டியன்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      சினிமா
Aunty-Indian 2021 11 28

Source: provided

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன் பேசும்போது, சென்னையில இருக்குற திறமையான கானா பாட்டு பாடும் இளைஞர்களை இதுல நடிக்க வச்சிருக்கேன். இந்தப்படத்துல சின்னச்சின்ன கேரக்டர்கள்ல நடிச்சிருக்கிற நடிகர்கள் கூட ரசிகர்களால பெரிசா கவனிக்கப்படுவாங்க என்றார். அதனையடுத்து இயக்குனரும் நடிகருமான ராமகிருஷ்ணன் பேசும்போது, இந்தப்படத்தை பார்த்ததும் இதை சேலத்துல நாம ரிலீஸ் பண்ணனும்னு முடிவு பண்ணி வாங்கினேன். இப்ப மிகப்பெரிய தியேட்டர்லாம் போட்டிபோட்டு படத்தை கேட்டுக்கிட்டு இருக்காங்க.” என்றார். தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசும்போது,  இந்தப்படத்துக்கு இயக்குனர் மாறன் தான் இசையமைச்சிருக்காரு.. இந்தப்படம் வெளியானதும் நிறைய படங்களுக்கு அவரை இசையமைக்க கேட்டு வந்தாலும் அதுல ஆச்சர்யப்பட தேவையில்லை என்றார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த ஆன்டி இண்டியன் படம் வரும் டிசம்பர் 10 ந் தேதியன்று வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து