முக்கிய செய்திகள்

மாநாடு – விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      சினிமா
Conference---Review 2021 11

Source: provided

வெளிநாட்டிலிருந்து ஒரு திருமணத்திற்காக ஊட்டிக்கு வரும் சிம்பு, நண்பர்களுடன் மணமகளைக் கடத்தி காரில் கோயம்பத்தூருக்கு விரைகிறார். போகும் வழியில் எதிர் பாராதவிதமாக ஒருவரை இடித்துத் ஆக்சிடென்ட் செய்துவிடுகிறார். அந்த நேரம் அங்கு வரும் போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே. சூர்யா சிம்பு மற்றும் நண்பர்களை கைது செய்கிறார்.  அவர்களை விடுவிக்க வேண்டுமானால் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லி ஒரு அசைன்மென்ட் கொடுக்கிறார். சிம்பு அந்த டாஸ்கை செய்தாரா, இல்லையா என்பதே ரிப்பீட் மோடில் ஓடும் ‘மாநாடு’ படத்தின் கதை. கொஞ்சம் அசந்தாலும் சலிப்பு தட்டிவிடும் திரைக்கதையை மிகவும் நேர்த்தியாக கையாண்டு தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் திரைக்கதையின் வேகம் அவை அனைத்தையும் மறக்கடிக்கச் செய்து ரசிக்க வைத்துள்ளது. படத்தின் நாயகி தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். பின்னணி இசையில் மாஸ் காட்டியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. தனது திரைக்கதை மேல் நம்பிக்கை வைத்து இப்படத்தை கொடுத்த வெங்கட் பிரபுவுக்கு சபாஷ். பாராட்டுக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து