முக்கிய செய்திகள்

பண மோசடி புகார் எதிரொலி: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் விசாரணை

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      தமிழகம்
Vijayabaskar 2021 11 29

பண மோசடி புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கேரளத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஷர்மிளா என்பவர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது பண மோசடி புகார் கொடுத்துள்ளார். 

2013 ஆம் ஆண்டு தனக்கு அறிமுகமான விஜயபாஸ்கரிடம் ரூ. 14 கோடி கொடுத்துவைத்ததாகவும் அதில், ரூ.3 கோடி மட்டுமே அவர் திருப்பிக் கொடுத்ததாகவும் மீதிப் பணத்தைக் கேட்கும்போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்ததாகவும் ஷர்மிளா புகார் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, இதுதொடர்பாக வழக்குப் பதிந்த அமலாக்கத்துறையினர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து