முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் உயர்ந்த தக்காளி விலை

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

மழை முடியும் வரை தக்காளி விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவு தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். தற்போது பெய்து வரும் பலத்தமழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து பாதியாக குறைந்து. இதனால் தக்காளி விலை திடீரென அதிகரித்தது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரையிலும், வெளி மார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

பின்னர் கனமழை இல்லாததால் கடந்த 3 நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் தக்காளி விலை ரூ.50 ஆக குறைந்தது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்து இருந்தனர். இந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்யத்தொடங்கி இருப்பதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து நேற்று குறைந்தது. 51 லாரிகளில் மட்டும் தக்காளி விற்பனைக்கு வந்தது. சாதாரண நாட்களில் 60 முதல் 70 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.

தக்காளி வரத்து குறைந்ததால் மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நேற்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.60-க்கும், சில்லரை கடைகளில் கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் மீண்டும் கவலை அடைந்து உள்ளனர். மழை முடியும் வரை தக்காளி விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது.,

தமிழகத்தில் தக்காளி உற்பத்தி நடைபெற்று வரும் பழனி, ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட வியாபாரிகள் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தக்காளி தேவை அதிகரித்து உள்ளது. மேலும் இந்த பகுதிகளில் மீண்டும் 2 நாட்களாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து