முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம்: மத்திய அரசின் ஆலோசனையை கடைப்பிடிப்போம் - பி.சி.சி.ஐ.

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : தென்ஆப்பிரிக்க பயணம் குறித்து மத்திய அரசின் ஆலோசனையை கடைப்பிடிப்போம் என்றும், இதில் வீரர்களின் பாதுகாப்பு குறித்து எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்றும் பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.

புதிய வைரஸ்...

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்கா சென்று விளையாட உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வீரியமிக்க ஒமைக்ரான் ரக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என சொல்லப்படுகிறது. 

சுற்றுப்பயணம்.... 

இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் பரவியுள்ள புதிய மாறுபாடு கொரோனா காரணமாக இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க பயணம் திட்டமிட்ட படி இருக்குமா? என்பது பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. 

சமரசம் இல்லை...

இதுகுறித்து (பிசிசிஐ) பொருளாளர் அருண் துமல் கூறுகையில்., அவர்கள் இந்த அச்சுறுத்தலைச் சமாளிக்கும்போது, நாங்கள் அவர்களுடன் துணை  நிற்கிறோம், வீரர்களின் பாதுகாப்பில் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம்.தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மேலும் கூறிய அவர்  இறுதியில், இந்திய அரசின் ஆலோசனை எதுவாக இருந்தாலும், நாங்கள் அதைக் கடைப்பிடிப்போம். என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து