முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹோண்டுராசில் முதல் பெண் அதிபர் தேர்வு

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஹோண்டுராசில் முதல் பெண் அதிபராக சியோமாரா காஸ்ட்ரோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராசில் கடந்த 12 ஆண்டுகளாக வலதுசாரி கட்சியான தேசிய கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் பதவிக்காக ஆளும் தேசிய கட்சியின் சார்பில் நஸ்ரி அஸ்புராவும், அவரை எதிர்த்து இடதுசாரி கட்சியான சுதந்திர கட்சியின் சார்பில் சியோமாரா காஸ்ட்ரோவும் போட்டியிட்டனர். இவர் அந்த நாட்டின் முன்னாள் அதிபர் மானுவல் ஜெலயாவின் மனைவி ஆவார். தேர்தல் தொடங்கியது முதலே கருத்து கணிப்பு முடிவுகள் இவருக்கு ஆதரவாக இருந்து வந்தது.

இந்த நிலையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் மொத்தம் பதிவான வாக்குகளில் சியோமாரா காஸ்ட்ரோ 53 சதவிகிதம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அஸ்புரா 34 சதவிகித வாக்குகளுடன் தோல்வியை தழுவினார்.  இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த நாட்டில் இடது சாரி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபர் என்கிற பெருமையையும் சியோமாரா காஸ்ட்ரோ பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து