முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடக்கம்

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜப்பானில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இயக்கம் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கியது. ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வந்த நிலையில், மே மாதத்துக்கு பிறகு அது அதிகரித்தது. அதன்படி தற்போது அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 77 சதவீதம் பேர் முழுமையாக, அதாவது 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் ஜப்பானிலும் கால் பதித்துள்ளது. அங்கு 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து, ஜப்பான் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டினர் வருகைக்கு ஜப்பான் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜப்பான் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோசை செலுத்தும் பணியை நேற்று முன்தினம் தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு இந்த பூஸ்டர் டோஸ் வழங்கப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  8 மாதங்களுக்கு முன்பு 2-வது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்ட அனைவரும் பூஸ்டர் டோசை பெற தகுதியுடையவர்கள் என்றும், தொற்று மேலும் அதிகமானால் இது 6 மாதமாக குறைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து