முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: பாராளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்றும், அணையை உடைக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்த மத்திய அரசு, தமிழ்நாடு, கேரளா இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா கூறிவரும் நிலையில், மக்களவையில் சுற்றுச்சுழல்துறை அமைச்சகம் இந்த விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து இருமாநிலங்களும் ஒப்புதல் அளிக்கும் நிலையில் புதிய அணைக்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது

இதற்கிடையே முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. புதிய அணை கட்டுவதோ பழைய அணையை இடிப்பதோ அணையின் உரிமையாளரான மாநில அரசின் முடிவு என்று தெரிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை அனைத்தையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. அணையின் பாதுகாப்பு குறித்து ஏற்கனவே பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்துள்ளன. உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட அதிகாரம் அளிக்கப்பட குழுவும் அணை பலமாக உள்ளதாக அறிக்கை அளித்துள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள முல்லை பெரியாறு அணை என்பது மிகவும் உறுதியாக இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கிறது எனவே அந்த அணையை உடைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு நேற்று மக்களவையில் தெரிவித்துள்ளது.கேரளாவை சேர்ந்த எம்.பி.களான கிபிகிடன் மற்றும் ஆண்ட்ரோ ஆண்டனி கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் இந்த பதிலை எழுத்துபூர்வமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

தற்போதுள்ள முல்லை பெரியாறு அணையானது உறுதியாக இல்லை, பாதுக்காப்பாக இல்லை எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடலாம், எனவே அந்த அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்டவேண்டும் என்பது கேரள அரசின் முடிவாக உள்ளது. ஆனால் இதனை எதிர்த்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மத்திய நீர்வளத்துறை ஆணையம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அந்த அடிப்படையில் வைத்து பார்க்கும் போது முல்லை பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது கேரள எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் பதில் அளித்துள்ளார். நீரியல் அடிப்படையில், கட்டுமான அடிப்படையில், புவி அதிர்வு அடிப்படையில் அணை பலமாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து