முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் 55 சதவீத கொரோனா பாதிப்புகள்: மத்திய அரசு தகவல்

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

நாட்டில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் 55% கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார துறையின் இணை செயலாளர் தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சக கூட்டம் நேற்று நடந்தது.  இதில் பேசிய மத்திய சுகாதார துறையின் இணை செயலாளர் லவ் அகர்வால், இந்தியாவில் இரு மாநிலங்களில் 55% கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படுகின்றன என கேரளா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களை சுட்டி காட்டியுள்ளார்.

 

ஒட்டுமொத்த அடிப்படையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.  அவற்றில் கடந்த ஒரு வாரத்தில், ஐரோப்பிய நாடுகளில் 70% அளவுக்கு எண்ணிக்கை பதிவாகி உள்ளது.  வார இறுதி நாளான 28ம் தேதியில், 2.75 லட்சம் புதிய பாதிப்புகளும், 31 ஆயிரம் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து