முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. கட்சித் தலைவர்கள் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நா.பெரியசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவர் அ.பாஸ்கர் ஆகியோர் நேற்று சந்தித்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தொடர்பான கோரிக்கைகளை நேரில் அளித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, நிறைவேற்றுவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து