முக்கிய செய்திகள்

அ.தி.மு.க. உட்கட்சித் தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      தமிழகம்
ADMK 2021 12 03

Source: provided

சென்னை : அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில், காலை 10 மணியளவில் தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது. வேட்பு மனுக்கள் 5-ம் தேதி காலை பரிசீலிக்கப்படும் என்றும் 6-ம் தேதி மாலை 4 மணி வரை மனுவை திரும்ப பெறலாம் என்றும் அ.தி.மு.க. தலைமை தெரிவித்துள்ளது.

அதை தொடர்ந்து டிசம்பர் 7-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை நடத்தி, தேர்தல் முடிவு டிசம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து