முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தை ஓடு பாதைக்கு தள்ளி கொண்டு போய் நிறுத்திய பயணிகள்

சனிக்கிழமை, 4 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

டயர் வெடித்ததால் ஒடுபாதையில் நின்று விட்ட விமானத்தை பயணிகளும், பாதுகாப்பு படையினரும் அங்கிருந்து தள்ளிக்கொண்டு போய் அது நிற்க வேண்டிய இடத்துக்கு கொண்டு போய் நிறுத்தினர்.

நேபாளத்தில் உள்ள பாஜூரா நகரத்தில் கோல்டி விமான நிலையத்தில் டாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று தரை இறங்கும் போது, ஓடுபாதையில் சென்ற போது திடீரென அதன் பின்புற டயர் வெடித்து நின்று விட்டது.  என்ன செய்வது என அறியாமல் விமானி திகைத்தார். இதற்கிடையே மற்றொரு விமானம் அங்கு வந்து தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் சூழல் உருவானது. ஆனால் அங்கிருந்த பயணிகளும், பாதுகாப்பு படையினரும் ஒடுபாதையில் நின்று விட்ட அந்த விமானத்தை அங்கிருந்து தள்ளிக்கொண்டு போய் அது நிற்க வேண்டிய இடத்துக்கு கொண்டு போய் நிறுத்தினர். இதை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட அது கேலி, கிண்டலுக்கு வழிவகுத்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!