முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் கோவிலில் 11-ம் தேதி முதல் எண்ணெய் காப்பு உற்சவம் : 19-ம் தேதி ஆருத்ரா தரிசனம்

சனிக்கிழமை, 4 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை எண்ணெய் காப்பு உற்சவம் நடக்கிறது. மேற்கண்ட நாட்களில் மீனாட்சி அம்மன் கோவில் உற்சவர் சன்னதியில் தைலக்காப்பு மற்றும் தீபாராதனை முடிந்த பின் சுவாமி - அம்பாள் 4 ஆடி வீதிகளில் வலம் வந்து காட்சியளிப்பார்கள். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை மாணிக்கவாசகர் திருவெண்பா உற்சவம் நடைபெறுகிறது. 16-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 13-ம் தேதி வரை திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக பக்தர்களுக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும். மேற்கண்ட நாட்களில் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை முடிந்து, பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு பல்லாக்கு புறப்பாடாகி பூஜைகள் நடக்கும். இவை முடிந்த பின் 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். தனுர் மாத திருவிழாவையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

11-ம் தேதி முதல் 19-ம்  தேதி வரை எண்ணெய் காப்பு உற்சவம் நடக்கிறது. மேற்கண்ட நாட்களில் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவில் உற்சவர் சன்னதியில் தைலக்காப்பு மற்றும் தீபாராதனை முடிந்த பின் சுவாமி-அம்பாள் 4 ஆடி வீதிகளில் வலம் வருவார்கள். 18-ம் தேதி கோ ரதத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஆடி வீதிகளில் புறப்பாடாவார். 19-ம் தேதி கனக தண்டியலில் அம்மன் எழுந்தருள்கிறார். 20-ம் தேதி திருவாதிரை அன்று பொன்னூஞ்சல் மண்டபத்தில் இருந்து சுவாமி ரி‌ஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வருகிறர்கள்.

11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை மாணிக்க வாசகர் 100 கால் மண்டபம் நடராஜர் சன்னதி முன்பு உள்ள சவுக்கையில் எழுந்தருள்கிறார். அங்கு திருவெண்பா பாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 4 ஆடி வீதிகளில் வலம் வருகிறார்.  மார்கழி மாத திருவாதிரை தினமான 19-ம்  தேதி நள்ளிரவு முதல் 20-ம் தேதி அதிகாலை வரை நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள் பொடி, திரவியப்பொடி, எண்ணெய் மற்றும் இதர பொருட்களை 19-ம் தேதி மாலை 7 மணிக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம். இவ்வாறு கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!