முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்: இறுதிச் சுற்றுக்கு சிந்து தகுதி

சனிக்கிழமை, 4 டிசம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்யில் பி.வி.சிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அரையிறுதிக்கு...

இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை போன்பவி சோச்சுவாங்கிடம் தோல்வியடைந்தார். இதன்மூலம், குரூப்-ஏ பிரிவில் சிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். சோச்சுவாங் முதலிடத்தை பிடித்தார்.

ஜப்பான் வீராங்கனை...

இந்நிலையில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் குரூப்-பி பிரிவில் இடம் பெற்றிருந்த ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி, இந்தியாவின் பி.வி.சிந்துவை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்தது. முதல் செட்டை 21-15 என்ற புள்ளிக்கணக்கில் சிந்துவும், இரண்டாவது செட்டை 15-21 என்ற புள்ளிக் கணக்கில் அகானேவும் கைப்பற்றினர்.  மூன்றாவது செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றிய சிந்து வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து