முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேச்சுலர் – விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

பெங்களூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார் ஜீ.வி.பிரகாஷ். ஜாலியான குனம் கொண்ட போதை ஆசாமியான ஜீ.வி யும் அவரது அலுவலக தோழியான திவ்யபாரதியும் லிவ் இன் டுகெதெரில் வாழ்கிறார்கள். இதனால்  சுப்பு கர்ப்பமாக கருவை கலைக்கச் சொல்கிறார் ஜீ.வி. அதில் திவ்யபாரதிக்கு உடன்பாடு இல்லை. இதையடுத்து அவர்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதே கிளைமாக்ஸ். ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் எந்த குறையும் இல்லை. தேர்ந்தெடுத்த கதையில் தான் குறையிருக்கிறது. திவ்யபாரதி தன் நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார் பாராட்டுக்கள். ஒரு இயக்குனர் கதை உருவாக்கத்தில் தனது என்ன ஓட்டங்களை மட்டும் நினைக்காமல் தயாரிப்பாளரின் நிலையிலிருந்து யோசிக்க வேண்டும், அதே நேரம் தயாரிப்பாளரும் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்று சொல்லி நழுவாமல் கையில் எடுத்துக் கொடுப்பதை பழக வேண்டும். மொத்தத்தில் இந்த பேச்சிலர் வாழ்வில் இசை, பாடல்கள், ஒளிப்பதிவு என எதுவும் சோபிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!