முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையில் பெய்த திடீர் மழை : பல இடங்களில் மின்தடை - மக்கள் அவதி

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

நெல்லை : திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. கல்லிடைக்குறிச்சி, சுரண்டை உட்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் சிரமமடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை திடீரென பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் மின் தடை ஏற்பட்டதால் மக்கள் சிரமமடைந்தனர். தென்காசி மாவட்டத்தில் சிவகிரியில் மட்டும் 6 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் மழைப்பதிவு இல்லை. மாவட்டத்தில் உள்ள 5 அணைகளும் நிரம்பியுள்ளதால், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.

கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 112 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 40 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 50 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 50 கனஅடி, அடவிநயினார் அணையில் இருந்து 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழையால் கரிவலம்வந்தநல்லூரில் உள்ள டாஸ்மாக் கடையை வெள்ளம் சூழ்ந்தது. மது பிரியர்கள் சிரமப்பட்டனர்.

இடுப்பளவு தேங்கிய தண்ணீரையும் பொருட்படுத்தாமல் நீரில் இறங்கிச் சென்று, மதுபானம் வாங்கிச் சென்றனர். சென்னிகுளம் அருகே உள்ள ரயில்வே பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கியதால் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மாற்று வழியில் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சென்னிகுளம் அருகே உள்ள ரயில்வே பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கியதால் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மாற்று வழியில் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து