முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் மருத்துவமனைகளில் கட்டண பலகை வைக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கட்டண பலகை வைக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தங்களது மருத்துவ கட்டணம் குறித்த தகவல் பலகையை வைப்பது தொடர்பான விதியை முறையாக பின்பற்ற உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது., தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் ஒரே மருத்துவத்திற்கு பலவகையான கட்டணங்களை வசூலிக்கின்றனர். குறிப்பாக மகப்பேறு மருத்துவத்தில் சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை என இருவழி பிரசவங்களுக்குமே அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சை எனில் ரூ.2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குழந்தை பிறந்த பின்னரும் தாயும், சேயும் மருத்துவமனையில் 3 முதல் 5 நாட்கள் தங்கி இருக்க வேண்டும் எனக் கூறி அறை கட்டணம், பரிசோதனைக்கான செலவுகள் என பெரும் அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விதிக்கப்படும் கட்டணமும் இன்னொரு மருத்துவமனை கட்டணத்தில் இருந்து மாறுபட்டதாக உள்ளது. ஆகவே தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் தங்களது மருத்துவ கட்டணம் குறித்த தகவல் பலகையை வைப்பது தொடர்பான விதியை முறையாக பின்பற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து