முக்கிய செய்திகள்

2025-க்குப் பின் வியட்நாமில் டூவீலர்களுக்கு தடை விதிக்க முடிவு

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      உலகம்
Vietnam 2021 12 07

Source: provided

ஹனோய் : வியட்நாம் நாட்டின் ஹனோய் நகரில் 2025-ம் ஆண்டுக்கு பின் மோட்டார் பைக்குகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி ஹனோய் நகர நிர்வாகம் தயாரித்துள்ள திட்ட அறிக்கையின் படி, ட்ரூவாங் சா, ஹோவாங் சா மற்றும் தேசிய நெடுஞ்சாலை 5 ஆகிய 3 ரிங் ரோடு பகுதியில் அமைந்த அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த தடை அமல்படுத்தப்படும்.  திட்டமிட்டதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே இதனை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.   

போக்குவரத்து நெருக்கடி மற்றும் புகை வெளியேற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.  2030-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த தடையானது 4-வது ரிங் ரோடு பகுதி வரையிலான அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

வியட்நாமின் தலைநகரில் 56 லட்சம் மோட்டார் பைக்குகள் இயக்கப்படுகின்றன.  குறிப்பிடத்தக்க அளவிலான பொது போக்குவரத்து இல்லாத நிலையில், தனி நபர்கள் வாகனங்களை பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து