முக்கிய செய்திகள்

3-ம் பாலினத்தவர் - ஓரினச் சேர்க்கையாளரை துன்புறுத்தும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க விதிகள் : வகுத்ததற்காக டி.ஜி.பி.க்கு ஐகோர்ட் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      தமிழகம்
Chennai-High-Court 2021 3

3-ம் பாலினத்தவர், ஓரினச் சேர்க்கையாளரை துன்புறுத்தும் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க விதிகள் வகுத்ததற்காக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது. காவல்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை உருவாக்கும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். 

மதுரையை சேர்ந்த இரு பெண்கள் சில மாதங்களுக்கு முன்னர் நட்புடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால் பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். இதற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து பிரிக்க முயற்சித்ததால், இருவரும் மதுரையில் இருந்து சென்னை வந்து தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வேலை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரையும் காணவில்லை என பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்துள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் அவ்விரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை அங்கீகரிப்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த நீதிமன்றம், அதை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

மேலும் தமிழக டி.ஜி.பி.க்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷூக்கு,“மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்ட விதிகளில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்” என அறிவுறித்தியிருந்தார். 

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக டிஜிபி தரப்பில் “சமபாலின ஈர்ப்பாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளுக்கான முன்மொழிவை அரசுக்கு அனுப்பியுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை டிசம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து