முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஷஸ் தொடரில் இருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல்

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை முதல் நடைபெறவுள்ளது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இன்று (டிசம்பர் 8) ஆரம்பிக்கும் ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கேன்பெராவில் ஜனவரி 27 அன்று தொடங்குகிறது. 

இந்நிலையில் முதல் டெஸ்டிலிருந்து பிரபல இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகியுள்ளார். 2-வது டெஸ்ட், அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொள்வதற்காக முதல் டெஸ்டில் இருந்து ஆண்டர்சன் விலகியுள்ளார். அவருக்குக் காயம் எதுவும் இல்லை. நல்ல உடற்தகுதியுடன் உள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 39 வயது ஆண்டர்சனால் ஆஷஸ் தொடரின் 5 டெஸ்டுகளிலும் பங்கேற்க முடியாது என்பதால் அவருடைய வேலைப்பளுவைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

கேப்டன் விராட் கோலிக்கு இர்பான் பதான் புகழாரம்

சர்வதேச அளவிலான கிரிக்கெட்டின் ஒவ்வொரு பிரிவிலும் விராட் கோலி 50 வெற்றிகளை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்காக பி.சி.சி.ஐ. அமைப்பு கோலிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளது. மேலும் பலரும் கோலிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறுகையில், ''நான் ஏற்கனவே கூறியது போல் விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த டெஸ்ட் கேப்டன். 59.09 என்கிற வெற்றி சதவீதத்துடன் அவர் முதலிடத்தில் உள்ளார்'' என்று டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த வீராங்கனையாக  எம்மா ராடுகானு தேர்வு

இந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று பிரபலமானவர் எம்மா ராடுகனு.18 வயதே ஆன எம்மா ராடுகனு கனடாவில் பிறந்தவர் .ஆனால் சிறு வயது முதலே பிரிட்டன்  நாட்டிற்காக டென்னிஸ் விளையாடி வருகிறார்.தகுதி சுற்றின் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்ற  இவர் அந்த தொடரில் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதி போட்டியில் பட்டம் வென்றார்.

இந்த நிலையில் 2021-ம் ஆண்டு பிரிட்டிஷ் விளையாட்டு விருதுகளில்  சிறந்த விளையாட்டு வீராங்கனைகான பட்டத்தை   எம்மா ராடுகானு பெற்றுள்ளார் .ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை மற்றும் சிறந்த  சர்வதேச புதுமுகப் வீராங்கனை பட்டங்களைப் அவர் தட்டிச்சென்றுள்ளார் . 19 வயதான ராடுகானு, அமெரிக்க ஓபனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் டென்னிஸ் உலகையே திகைக்க வைத்தார்.

அஷ்வினுக்கு வாய்ப்பு மறுப்பு: பாக். வீரர் சல்மான் பட் கேள்வி

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஷ்வின். தமிழகத்தை சேர்ந்த 35 வயதான அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசினார். அவர் 14 விக்கெட் கைப்பற்றி தொடர் நாயகன் விருதை பெற்றார். அஸ்வின் 81 டெஸ்டில் விளையாடி 427 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். சொந்த மண்ணில் சிறப்பாக பந்து வீசிய அவருக்கு இங்கிலாந்து பயணத்தின்போது ஒரு டெஸ்டில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 

இந்நிலையில் நியூசிலாந்து தொடரில் அபாரமாக பந்துவீசிய அஷ்வினுக்கு இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கொடுக்காதது குறித்து கேப்டன் விராட் கோலி, அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் வலியுறுத்தி உள்ளார். அஷ்வின் போன்ற மேட்ச் வின்னரை இங்கிலாந்து தொடரில் விளையாட வாய்ப்பு கொடுக்காததை இன்னும் நம்ப முடியவில்லை. அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீரர். அவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்காதது ஏன்? என்பது பற்றி அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலி ஆகியோர் மட்டுமே பதில் அளிக்க முடியும். அவர்கள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து