முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து திருக்கோவில் திருமண மண்டபங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் நடத்தும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 8 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மாற்றுத்திறனாளிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பில், மாற்றுத்திறனாளிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் திருமணம் நடைபெறவுள்ள  மாற்றுத்திறனாளி மணமகன் மற்றும் மணமகளுக்கு, திருக்கோயிலில் திருமணம் செய்திட கட்டணம் இல்லை என்ற உத்தரவினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.  

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், மணமக்களின் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும், திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கபடும் என்றும் அறிவிக்கப்பட்டது.    

இந்த அறிவிப்பினை நிறைவேற்றும் விதமாக, சென்னை, திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி திருமணத்திற்கு  மணமகன் எஸ். சுரேஷ்குமார் மற்றும் மணமகள் எஸ். மோனிஷா ஆகியோருக்கு திருக்கோயிலில் திருமணம் செய்திட கட்டணம் இல்லை என்ற உத்தரவினை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்களுடன் பரிசு பொருட்களையும் வழங்கி அவர் வாழ்த்தினார். 

இத்திட்டத்தை தொடங்கி வைத்ததன் மூலம், இனிவரும் காலங்களில் திருமணம் நடத்தவிருக்கும் மாற்றுத்திறனாளிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம்  நடைமுறைப்படுத்தப்படும். 

இந்த நிகழ்வின்போது, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து