முக்கிய செய்திகள்

இந்திய அணியின் ஒருநாள் அணிக்கும் 'ரோகித் ஷர்மா' கேப்டனாக நியமனம்: பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா தகவல்

புதன்கிழமை, 8 டிசம்பர் 2021      விளையாட்டு
Rohit-Sharma--2021-12-08

இந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் ரோகித் ஷர்மா. இதனை இந்திய சீனியர் அணியை தேர்வு செய்யும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய்ஷா. 

கோலி விலகல்...

அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் விராட் கோலி. அதையடுத்து நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை வழிநடத்தினார் ரோகித் ஷர்மா. 

ஒருநாள் போட்டி...

அதுமுதலே இந்திய அணிக்கு ஒருநாள் போட்டியிலும் ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது வந்தது. இந்த நிலையில் தான் எதிர்வரும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்து ரோகித், ஒருநாள் போட்டிகளிலும் அணியை வழிநடத்த உள்ளார். கோலி, இந்திய டெஸ்ட் அணியை மட்டுமே வழிநடத்துவார் என தெரிவித்துள்ளது பிசிசிஐ.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து