முக்கிய செய்திகள்

முப்படை தலைமை தளபதி உள்பட 13 பேர் மறைவு: பார்லி.யின் இரு அவைகளிலும் இரண்டு நிமிட மவுன அஞ்சலி

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2021      இந்தியா
loksabha-2021-12-09

Source: provided

புதுடெல்லி : முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் மறைவுக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் நேற்று விளக்கம் அளித்தார்.

 

அதற்கு முன்பாக, பாராளுமன்றத்தின்  மாநிலங்களவை மற்றும் மக்களவையில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து