முக்கிய செய்திகள்

தமிழகத்தில் 3-வது மொழியை கற்க கட்டாயப்படுத்தக் கூடாது அமைச்சர் பொன்முடி பேச்சு

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2021      தமிழகம்
Ponmudi--2021-12--09

Source: provided

திருச்சி : தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் நடைமுறையில் உள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் பொன்முடி 3-வது மொழியை கற்க மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார்.

 

பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது., தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் நடைமுறையில் உள்ளது. மாணவர்கள் விருப்பட்டால் 3-வது மொழியை கற்றுக்கொள்ளலாம். ஆனால் கட்டாயப்படுத்தக்கூடாது. என்றார். 

தொடர்ந்து  இரு மொழிக் கொள்கைக்கு கவர்னரும் ஆதரவு அளிக்க வேண்டும் என  பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோரிக்கை வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து