முக்கிய செய்திகள்

தீவிர சிகிச்சையில் இருக்கும் கேப்டன் வருன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உருக்கம்

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2021      இந்தியா
ramnathsingh 2021 12 09

Source: provided

புதுடெல்லி : குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கும் கேப்டன் வருன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.  விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், துயரமான ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பிய கேப்டன் வருன் சிங் பற்றியே எனது எண்ணங்கள் உள்ளன. வருண் சிங் விரைவில் குணமடைந்து நீண்ட ஆயுள்பெற பிரார்த்திக்கிறேன். என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து