முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயிலை நிறுத்தி விட்டு தயிர் வாங்க சென்ற டிரைவர் வேலையிழந்தார்

சனிக்கிழமை, 11 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

பாகிஸ்தானில் ரயிலை நிறுத்தி விட்டு தயிர் வாங்க சென்ற டிரைவரின் வேலை பறிபோனது. 

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து தெற்கே கராச்சியை நோக்கி இண்டர்சிட்டி ரயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த ரயில்  டிரைவர் எந்தவித அறிவிப்புமின்றி திட்டமிடப்படாத ஒரு இடத்தில் ரயிலை நிறுத்தி விட்டு, தயிர் பாக்கெட் வாங்கி வந்துள்ளார். அவர் கானா ரயில் நிலையம் அருகே ரயிலை நிறுத்தி விட்டு தயிர் வாங்க சென்றுள்ளார். பின், அலட்சியமாக நடந்து வந்து மீண்டும் ரயிலை இயக்கி உள்ளார்.  இந்த நிகழ்வை ரயிலில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவை பலர் பார்த்து வருகின்றனர். மேலும் பலரால் இது பகிரப்பட்டும் வருகிறது.  பாகிஸ்தானை சேர்ந்த ரயில் ஓட்டுநரை பற்றிய அந்த வீடியோ தான், சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இந்த வீடியோவை பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் அசாம் கான் பார்த்து விட்டு, அந்த ரயில் டிரைவரின்  மீது உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலம் அந்த டிரைவரின்  வேலை பறிபோனது. அவருடன் சேர்த்து அந்த ரயிலின் உதவியாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  இது குறித்து ரயில்வே அமைச்சர் கூறியதாவது:-

நாட்டின் சொத்துக்களை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்த எவரையும் அனுமதிப்பதில்லை. இதற்கு முன் இப்படியொரு நிகழ்வு நடந்ததில்லை. இனி எதிர் காலத்தில் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து