முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகள் ஏற்படும் : ரஷ்யாவுக்கு பிரிட்டன் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷ்யா கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பிரிட்டன் எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து பிரிட்டனின் லிவா்பூல் நகரில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் எலிசபெத் டிரஸ் கூறியதாவது:-

உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்தால் அந்த நாடு கடும் பின்விளைவுகளை எதிா்கொள்ள வேண்டிருக்கும். உக்ரைனை ஆக்கிரமிக்கும் முடிவு ரஷ்யாவின் மோசமான தவறாக இருக்கும்.  அத்தகைய நிலை ஏற்பட்டால் ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையிலான தடைகள் விதிக்கப்படும்.  ரஷ்யாவிடமிருந்து உக்ரைனைப் பாதுகாப்பதற்கு ஜி7 நாடுகள் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் செயல்படும். இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்துடைய மற்ற நட்பு நாடுகளையும் நம்முடன் இணைந்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

அந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக, லண்டனில் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலேபாவைச் சந்தித்து எலிசபெத் டிரஸ் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.  அப்போது ரஷ்யாவிடமிருந்து உக்ரைனுக்கு ராணுவ ரீதியில் பிரிட்டன் உதவுமா என்று செய்தியாளா்கள் கேட்டனா். அதற்கு, பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடா்பாகவும் உக்ரைனுடன் இணைந்து பணியாற்றுகிறோம் என்று எலிசபெத் டிரஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து