முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக தடுப்பூசி: ரஷ்யா கண்டுபிடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக முதல் தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரசுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்தது. இப்போது தென் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகமெங்கும் பரவி வருகிற உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரசுக்கு எதிராகவும் முதல் தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யாவின் கமலேயா தேசிய தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம்தான் ஒமைக்ரானுக்கும் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. ஆனால் தற்போது பயன்பாட்டில் உள்ள பிரதான தடுப்பூசியை மாற்றுவதற்கான காரணம் எதுவும் இல்லை என்று கமலேயா தேசிய தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அலெக்சாண்டர் ஜிண்ட்ஸ்பர்க், ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.  இது குறித்து அவர் மேலும் கூறுகையில், முந்தைய அனைத்து உருமாற்றங்களுக்கும் எதிராக இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது என கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து