முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் உதிரிபாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஹெலிகாப்டர்: பிரேசில் சாலையில் இயக்கி சாதனை

திங்கட்கிழமை, 13 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு நபர், பழைய கார் பாகங்களை பயன்படுத்தி ஹெலிகாப்டர் தயாரித்து அதில் வானில் பறந்து சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ நோர்டேவில் இந்த அசர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. 

பழைய மோட்டார் சைக்கிள், லாரி , கார் மற்றும் மிதிவண்டி போன்றவற்றிலிருந்து உதிரி பாகங்களை எடுத்து அவர் இந்த ஹெலிகாப்டரை வடிவமைத்துள்ளார். இந்த விமானம் வோல்க்ஸ்வேகன் பீட்டில் இன்ஜின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.  ஜோவோ டயஸ் நகரத்தை சார்ந்த ஜெனிசிஸ் கோம்ஸ் என்ற அந்த நபர், வாகனங்கள் பயணிக்கும் சாலையை விமான ஓடுதளமாக பயன்படுத்தி, தான் காரிலிருந்து உருவாக்கிய விமானத்தை இயக்கியுள்ளார். இதனை உள்ளூர்வாசிகள் படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

அவர் சிறுவயதிலிருந்தே விமான சேவை குறித்து அதீத ஆர்வமுடையவராக இருந்து வந்துள்ளார். ஹெலிகாப்டர் ஒன்றை இயக்க வேண்டும் என்று கனவு கொண்டிருந்தார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. இதன் காரணமாக தனக்கென ஒரு ஹெலிகாப்டரை வடிவமைக்க முடிவெடுத்துள்ளார் என்று அங்கு  வசித்து வரும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.  எனினும் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,  இந்த ஹெலிகாப்டர் என் நண்பனுடையது. நாங்கள் ஜோவோ டயஸ் நகரத்தின் மீது மிக உயரமாக பறந்தோம். விரைவில் எனக்கென ஒரு ஹெலிகாப்டரை தயாரிப்பேன். இது முற்றிலும் பழைய பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து