முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச விவகாரங்கள் குறித்து ஜி ஜின்பிங் - புடின் இன்று காணொலியில் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 14 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங், : சீன அதிபா் ஜி ஜின்பிங்கும், ரஷ்ய அதிபா் விளாடிமிர் புடினும் இருதரப்பு உறவுகள், சா்வதேச விவகாரங்கள் குறித்து இன்று (டிச. 15) காணொலி முறையில் ஆலோசிக்க உள்ளனா்.

உக்ரைன் எல்லையில் ஏராளமான ராணுவ வீரா்களை ரஷ்யா குவித்துள்ளதையடுத்து, அந்த நாட்டுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் செய்தியாளா்களிடம் கூறுகையில், 

பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவு, ஒத்துழைப்பு குறித்து இரு தலைவா்களும் பேச்சுவாா்த்தை மேற்கொள்வா் எனத் தெரிவித்தாா்.  உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கடந்த வாரம் புடினுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். 

சா்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியலில் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு பதிலடி தரும் வகையில் சீனாவும், ரஷ்யாவும் தங்களது வெளியுறவுக் கொள்கைகளில் அண்மைக்காலமாக மாற்றங்களைச் செய்து வருகின்றன. ரஷ்யாவை போலவே சீனாவும் தனது உள்நாட்டு கொள்கைகள் காரணமாக அமெரிக்காவால் பொருளாதார தடைகளைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து