முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவும், இங்கிலாந்தும் இயற்கையாகவே கூட்டாளிகள் - போரிஸ் ஜான்சன் பெருமிதம்

புதன்கிழமை, 15 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

இந்தியாவும், இங்கிலாந்தும் ‘2030 இந்தியா-இங்கிலாந்து சாலை வரைபடம்’ திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தொழில்நுட்பம் மற்றும் பிற பகுதிகளில் தங்கள் பிணைப்பை தொடர்ந்து ஆழப்படுத்தும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.

மத்திய வெளியுறவு அமைச்சகமும், கார்னகி இந்தியா என்கிற அரசு சாரா அமைப்பும் இணைந்து 6-வது உலகளாவிய தொழில்நுட்ப மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக நடத்தியது. இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

எங்களுடைய பகிரப்பட்ட புதுமை கலாசாரம் மற்றும் எங்களின் தொழில் முனைவு ஆற்றல் ஆகியவற்றின் மூலம் இங்கிலாந்தும், இந்தியாவும் இயற்கையான கூட்டாளிகளாக திகழ்கின்றன. நாங்கள் பல அருமையான திட்டங்களில் ஒன்றாக வேலை செய்கிறோம். வரும் 10 ஆண்டுகளில் இந்தியாவும், இங்கிலாந்தும் ‘2030 இந்தியா-இங்கிலாந்து சாலை வரைபடம்’ திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தொழில்நுட்பம் மற்றும் பிற பகுதிகளில் தங்கள் பிணைப்பை தொடர்ந்து ஆழப்படுத்தும்.

இவ்வாறு போரிஸ் ஜான்சன் கூறினார்.

கடந்த மே மாதம் இங்கிலாந்து-இந்தியா இடையே காணொலி காட்சி வாயிலாக நடந்த உச்சிமாநாட்டின்போது ‘2030 இந்தியா-இங்கிலாந்து சாலை வரைபடம்’ திட்டம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து