முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரிய அதிபர் கிம்-மின் தாத்தா 101 வயதில் மரணம்

வியாழக்கிழமை, 16 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

சியோல், டிச : வடகொரியாவை நிறுவிய கிம் இல் சங்கின் சகோதரரும், அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் ஜோங் ஜு, தனது 101-வது வயதில் மரணமடைந்துள்ளார். 

வடகொரியா நாட்டை கடந்த 1948-ம் ஆண்டு நிறுவிய கிம் இல் சங், தனது வாழ்நாள் முழுவதும் அந்த நாட்டை ஆண்டார். கம்யூனிச நாடான இதில், சர்வாதிகாரியாக செயல்பட்டார். இவர் கடந்த 1994-ம் ஆண்டு இறந்த பிறகு,  அவருடைய மூத்த மகன் கிம் ஜோங் இல் அதிபரானார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு இறந்தார். அதைத் தொடர்ந்து, இவருடைய கடைசி மகனான கிம் ஜோங் உன் அதிபராகி, தற்போது வரையில் 3-வது தலைமுறையாக ஆட்சி செய்து வருகிறார்.

கிம் இல் சங்கின் இளைய சகோதரரான கிம் யங் ஜு, தனது சகோதரரின் ஆட்சிக் காலத்தில் வடகொரியாவின் பலம் வாய்ந்த தலைவராக விளங்கினார். கிம் இல் சங்குக்கு அடுத்தபடியாக நம்பர்-2 இடத்தில் இருந்து, நிர்வாகங்களை கவனித்தார். தற்போதைய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு இவர் தாத்தா முறையாகிறார். கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு இவர் பொதுவெளியில் தோன்றினார். அதன் பிறகு, உடல்நிலை பாதிப்பால் வெளியே வராமல் இருந்தார். 

இந்நிலையில், இறந்து விட்டதாக வடகொரியா அறிவித்தது. இவர் கடந்த 1920-ம் ஆண்டு பிறந்ததாக, வடகொரியாவின் எதிரி நாடான தென்கொரியா தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது இவருடைய வயது 101. இவர் எப்போது இறந்தார் என்பதை வடகொரிய அரசு தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து