முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதன் முறையாக சூரியனை தொட்ட அமெரிக்க விண்கலம்

வியாழக்கிழமை, 16 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கடந்த 2018-ல், சூரியன் குறித்து ஆய்வு செய்ய பார்க்கர் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. கடந்த ஏப்ரலில் பார்க்கர், சூரியனுக்கு நெருக்கமாக வந்தது. அப்போது சூரியனின் வெளிப்புற வெப்ப வாயு மண்டலத்திற்குள் பார்க்கர் நுழைந்து வெளியேறியது. அது போல, தற்போது சூரியனின் வெளிப்புற வெப்ப வாயு மண்டல பகுதியில் மூன்று முறை பார்க்கர் நுழைந்து வெளிவந்துள்ளது.

இது குறித்து மிச்சிகன் பல்கலை விஞ்ஞானி ஜஸ்டின் காஸ்பர் கூறியதாவது:

 

பார்க்கர் மிக வேகமாக சூரியனை சுற்றுகிறது. தற்போது, சூரியனின் மையப் பகுதியில் இருந்து, 1.30 கோடி கி.மீ., துாரத்தில் பார்க்கர் உள்ளது.  வினாடிக்கு, 100 கி.மீ., வேகத்தில் சுற்றும் பார்க்கர், மூன்று முறை சூரியனின் வெப்ப வாயு மண்டலத்திற்குள் நுழைந்து வெளிவந்துள்ளது. 

இது ஒருவகையில் சூரியனை தொட்டது போன்றது தான். முதன் முறையாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து