முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் லாரியில் வெடி விபத்து பலி எண்ணிக்கை 75-ஆக உயா்வு

வியாழக்கிழமை, 16 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

போா்ட் ஆ-பிரின்ஸ், டிச : கரீபியன் கடல் பகுதி நாடான ஹைட்டியில் பெட்ரோல் ஏற்றி வந்த லாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 75-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, 

கேப் ஹைட்டியன் நகரில் பெட்ரோல் ஏற்றி வந்து கொண்டிருந்த லாரி, விபத்துக்குள்ளானது. எதிரே வந்த மோட்டாா் சைக்கிளில் மோதுவதை தவிா்ப்பதற்காக லாரியை ஓட்டுநா் வேகமாகத் திருப்பியதாகவும், அதில் அந்த லாரி பக்கவாட்டில் கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்த விபத்தைக் கண்ட பலா், லாரியிலிருந்து வழிந்த பெட்ரோலை சேகரிப்பதற்காக அங்கு குவிந்தனா். அப்போது அந்த லாரியிலிருந்த எரிபொருள் பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இதில் 75 போ் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். 

இந்த விபத்தில், அருகிலிருந்த 50 வீடுகளும் எரிந்து நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  எரிபொருள் பற்றாக்குறையில் ஹைட்டி சிக்கித் தவித்து வரும் சூழலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து