முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிஸ்க் நாடுகளிலிருந்து வரும் பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக்கான முன்பதிவு செய்வது கட்டாயம் : மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிக்கை

வெள்ளிக்கிழமை, 17 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஹாங்காங் உட்பட அதிக பாதிப்புள்ள 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கான முன்பதிவு செய்ய வேண்டும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிக பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் / செல்லும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை கட்டாயம் முன்பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக டெல்லி, மும்பை கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு மெட்ரோ நகரங்களில் செயல்படுத்த மத்திய விமான போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தங்கள் பயணிகளை விமானத்தில் ஏற்றும் முன் கட்டாயமாக முன்பதிவு செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. முன்பதிவு செய்வதில் பயணிகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், அவர்கள் ஏறுவதற்கு மறுக்கப்பட மாட்டார்கள், ஆனால் அத்தகைய பயணிகளைக் கண்டறிந்து, பரிசோதனைக்காக விமான நிலையத்தில் உள்ள பதிவு கவுண்டருக்கு அழைத்துச் செல்வது விமான நிறுவனங்களின் பொறுப்பு என மத்திய விமானத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து