முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசநோய் இல்லா இந்தியாவை உருவாக்க மக்களின் பங்களிப்பு அவசியம் : வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 17 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : 2025-ம் ஆண்டுக்குள் ‘காசநோய் இல்லா இந்தியா’ பிரச்சாரத்தில் மக்களை 'முக்கிய பங்காளிகளாக' உருவாக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ''எல்லா நோய்களையும் விட, காசநோயை முற்றிலுமாக அகற்ற சமூகத்தின் ஈடுபாடு இன்றியமையாதது. காசநோயின் தாக்கம் சமுதாயத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் மீது அதிக அளவில் உணரப்படுகிறது. காசநோயை ஒழிக்க வளங்களைப் பெருமளவில் திரட்டவும் பல துறைகளின் தலையீடுகளும் தேவை.

மக்கள் இயக்கமாக உருவெடுத்தால் மட்டுமே காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் இலக்கை அடைய முடியும். இந்த இயக்கத்தில் மக்களை ஈடுபடுத்த அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன். 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற ‘டீம் இந்தியா’ உணர்வை ஏற்றுப் பல்முனை முயற்சிகள் தேவை. காசநோய் இல்லா இந்தியாவை உருவாக்க மக்களின் பங்களிப்பு அவசியம் என்றார்.

காசநோய்க்கு எதிராக பெண்கள் வெற்றி பெறுவதற்கான தேசிய மாநாட்டில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், காசநோய் தொடர்பாக இந்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது மாநாடு இது என்பதால் காசநோய் ஒழிப்பில் அரசின் உறுதி தெளிவாகத் தெரிகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து